நுவரெலியா மாவட்டத்தில் எமது வெற்றி நிச்சயம்- பழனி திகாம்பரம் தெரிவிப்பு


இன்று ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் மதியம் இடம்பெற்ற கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான திகாம்பரம் உரையாற்றுகையில் எம்மை வெற்றிப் பெற வைக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும ் என தெரிவித்து பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

 மேலும் அவர் தெரிவித்ததாவது ஒரு சிலர் பெட்,போல்களை வழங்கி வாக்கு கேட்கின்றார்கள், ஒரு சிலர் அனுதாப வாக்குகளை கேட்கின்றார்கள் எமது அணி மட்டுமே மக்களுக்காக சேவைகளை செய்துவிட்டு வாக்கு கேட்கின்றது.எனவே நுவரெலியா மாவட்டத்தில் எமது வெற்றி நிச்சயம். ஐந்து ஆசனங்களை வென்று மாவட்டத்தையும் கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக எனக்கு பின்னர்  எனது மகனை கொண்டு வரப்போவதில்லை தொழிலாளி ஒருவரே வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக முன்னால் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்துக் கொண்டுள்ளதோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களும் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: