வாக்காளர் அட்டைகள் விநியோகம்
இன்றைய தினம் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் விசேட தினமாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை 80 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 29ம் திகதி வரை பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: