வைத்தியசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற வந்த ஒருவர் நேற்றைய தினம் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இந்த விசேட வேலைத்திட்டத்தினை இராணுவத்தினரும் காவற்துறையினரும் இணைந்து  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: