சாரதிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகன மற்றும் வீதி விபத்துக்களின் போது சாரதிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுவது தற்போது நடைமுறையில் உள்ளதோடு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு புள்ளிகள் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அதன்படி சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படுவதோடு சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பத்திலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற சந்தர்ப்பத்திலும் புள்ளிகள் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

புள்ளிகள் குறைக்கப்பட்டு பூச்சியத்தை எட்டும் சந்தர்ப்பத்தில் சாரதிகளின் அனுமதிப் பத்திரம் இரத்தாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: