கொழும்பு மாவட்ட மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்மானம்

நேற்று  கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கொழும்பு மாவட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு முறையான திட்டத்துடன் கொழும்பை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் கிடைக்காமை , சேறிகளுக்கு மாற்றீடாக வீடுகளை பெற்றக் கொள்ளுதல் மற்றும் வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல பிரச்சினைளுக்கு  தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: