பொது மக்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட பொது போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான திட்டம் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் திகதி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல பேருந்துகளும் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும்  தொடருந்து திணைக்களத்தின் சகல தொடருந்துகளும் விசேட பொது போக்குவரத்து திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments: