காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை

மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் இதனை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.No comments: