கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரி பணி நீக்கம்ஐஸ் ரக போதைப் பொருளுடன் மதுவரி அதிகாரி ஒருவர் புத்தளம் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் போதை ஒழிப்பு பிரிவினரால் சாளியாவெல பகுதியில் வைத்து  இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி மதுவரித்  திணைக்கள அநுராதபுர அலுவலகத்தில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மதுவரித்  திணைக்கள அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்துள்ளதாக மதுவரித் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: