இரண்டாவது நாளாக நடைபெறும் தபால் மூல வாக்களிப்புஎதிர்வரும் பொது தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெறுகிறது.

சகல காவற்துறையினர்,பாதுகாப்புப் படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம்,சுகாத பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்துஅலுவலகங்களில் சேவையாற்றும் சேவையாளர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ராஜாங்கனை பிரதேச செயலக பிரிவுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான தீர்மானம் மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளைய தினம்  கூடவுள்ளது.

No comments: