வாக்குப் பதிவினை ஓளிப்படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தபால் மூல வாக்குப் பதிவு தற்போது நடைப்பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கான தபால் மூல வாக்குப் பதிவினை வேறு ஒரு நபர் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவேற்றியவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேர்தலின் போது வாக்குப் பதிவினை ஒளிப்படம் எடுப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் இது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலாகும் என்றும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவொர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: