ராமேஸ்வரனின் வெற்றியை நாங்கள் உறுதிசெய்வோம்.மாற்றுக்கட்சியினர் இ.தொ.காவோடு இணைவு.


(நீலமேகம் பிரசாந்த்)

பாராளுமன்ற தேர்தலையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்தியமாகாண அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அந்தவரிசையில் இன்றைய தினமும் பெருமளவிலான மாற்றுக்கட்சி இளைஞர்கள் மருதபாண்டி ராமேஸ்வரனோடு ஐக்கியமாகினர்.

பூண்டுலோயா பழையதோட்ட இளைஞர்களே இவ்வாறு இன்றைய தினம் இணைந்துக்கொண்டனர்.இதன்போது உரையாற்றிய இளைஞர்கள் தற்போதைய சூழ்நிலையில் இ.தொ.காவின் ஆட்சியே மலையகத்துக்கு தேவை எனவே இம்முறை தேர்தலில் இ.தொ.காவோடும் ராமேஸ்வரனோடும் இணைந்து பயணிப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: