காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைதுமாராவில்-மஹவெவ பகுதியில் அமைந்துள்ள காவற்துறை சோதனைச் சாவடியில் வைத்து வர்த்தகர் ஒருவரிடம் பலவந்தமாக  பணம் பெற முயற்சித்த காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 20ம் திகதி குறித்த சோதனைச் சாவடிக்கு அருகில் விபத்தொன்று ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கிருந்த மின் விளக்குகள் சேதமடைந்தது.அதனை விபத்து ஏற்படுத்திய நபரே புனரமைப்பு  செய்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது விபத்து ஏற்படுத்தியவரின் பணப்பை  காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன குறித்த பணப்பையில் காணப்பட்ட பணத்தை உதவி காவற்துறை பரிசோதகர் கொள்ளையிட்டதுடன்  மற்றுமொரு உத்தியோகத்தருக்கு 30 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.

30 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்ட காவற்துறை உத்தியோகத்தர் காவற்துறை தலைமையகத்தில்  தெரிவித்து 30 ஆயிரம் பணத்தையும் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவற்துறை தலைமையகம் இந்நடவடிக்கைகளை மேற்கொண்ட 2 காவற்துறை அதிகாரிகளையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 

No comments: