வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் நம்பி மக்கள் ஏமாற கூடாது -வினோகாந்த்


(ஊடகப்பிரிவு)
கடந்தகாலங்களில் மக்களை ஏமற்றியது போன்று பெய்யான வாக்குறுதிகளை இம் முறையும் மக்கள் மத்தியில் மூளைச்சலவை செய்து விதைப்பதற்கு ஒரு சிலர் முற்பமுடுகின்றனர்.

என்று ஜக்கிய மக்கள் சக்தியில் திகாமடுல்ல மாவடட்டத்தின் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெ.வினோகாந்த் பொத்துவில் பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார்.

நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய்களை மனச்சாட்சியின்றி எமது மக்கள் மத்தியில் விதைக்கும் செயற்பாட்டில் ஒரு குழுவினர் தேர்தல் பரப்புரை செய்கின்றனர் நான் அவர்களை சுட்டிக்காட்ட விரும்பவில்லை ஒருவரை விமர்சித்து அரசியல் செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை. ஆனால் அவர்கள் விட்ட பிழைகளை எனக்கு சுட்டிக்காட்ட முடியும்.

இவர்களின் வாக்குறுதிகள் கடந்தகாலங்களைப் போன்று காற்றில் பேய்விடும் என்பதை மக்கள் நன்கு உணரவேண்டும் ஏன் எனில் இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று நான் செய்து விட்டு சொல்பவன் மக்களுக்கு செய்து காட்டியும் இருக்கின்றேன்.

திருக்கோவில், பொத்துவில் பிரதேசங்களில் தண்ணீர் இல்லாமல் விசாயம் செய்யும் 25000ம் தரிசு நிலங்கள் வரட்சியடைந்து கிடக்கின்றது என்னால் முடியும் இதற்கு தண்ணீர் கொண்டுவந்து எமது மக்களுக்கு விசாயம் செய்வதற்கு என்னால் முடியும் எனது முன்மொழிவுக்கு அமைவாக தலைவர் சஜித் பிறேமதாச காஞ்சிரம் குடா மற்றும் கஞ்சி குடிச்சாறு குளங்களை புனரமைத்து நீர்வசதி ஏற்படுத்தி தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நிச்சயம் அவர் செய்து காட்டுவார்.

கடந்த காலங்களில் சமுர்த்தி முத்திரை தொடக்கம் வீடமைப்பு வரை நான் மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு உழைத்தவன்.

மக்களின் மன நிலை மக்களுக்கான தேவைப்பாடுகள் அனைத்தும் எனக்குத் தெரியும் பொய் வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாந்த தருணம் மக்களுக்கு கை கொடுத்தவன் நான் இதை யாரும் மறுக்கமாட்டார்கள் .

கடந்த காலங்களைப் போன்று ஏமாறாமல் அபிவிருத்தி நோக்கியும் உங்கள் தேவைப்பாடுகள் தொடர்பிலும் என்னால் உங்களுக்கு பொய்வாக்குறுதிகள் வழங்கமுடியாது ஆனால் செய்து காட்ட முடியும்.

முதலில் மக்கள் பொய்வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என்றார்.
No comments: