கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் 27ம் திகதி முதல் 11,12 மற்றும் 13ம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள்  ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏனைய மாணவர்களுக்கு  ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாடசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு  உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைகளை பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments: