நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தியினை முன்னெடுப்பதே எமது நோக்கம் -முத்தையா பிரபாகரன்


(எஸ்.சதீஸ்)

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தியினை
முன்னெடுப்பதும் எமது ஜனாதி அவர்களுக்கு வெற்றியினை பெற்றுகொடுப்பதே எமது நோக்கமாக உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளார்

மஸ்கெலியா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தினை எடுத்து கொண்டால் அபிவிருத்தி குறைந்த மாவட்ட பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது

இதே வேளை வருமானம் குறைத்த மக்கள் வாழும் மாவட்டமாகவும் இது காணப்படுகின்றது இதனை எவ்வாறு நாம் மாற்றியமைக்க போகின்றோம் ஏனய மாவட்டங்களை போல் எமது மாவட்டத்தையும் ஒரு அபிவிருத்தியடைந்த மாவட்டமாக நாம் கொண்டுவரவேண்டும்

மலையகத்தில் அனைத்து வழங்களும் கானப்படுகிறது அன்னிய செலாவானியை ஈட்டிதரும் பொருலாக தேயிலை விளங்குகிறது

அதிகலவிலான மின்சாரம் மலையகதத்ல் இருந்து தான்
உற்பத்திசெய்யப்படுகிறது விவசாயம் போன்றன கானப்பட்டும் வருமான குறைந்த மக்கள் இங்குதான் காணப்படுகிறார்கள்

மக்கள் மத்தியில் வருமானங்களை  அதிகரித்து கொள்ளும் திட்டங்கள் இல்லை தொழிற்பேட்டைகள் காணப்படுவதில்லை ஆகையால் தான் படித்த இளைஞர்யுவதிகள் தொழில்யின்றி அதிகமானோர உள்ளனர்.

இது போன்ற திட்டங்களை உருவாக்க எவரும் இதுவரைகாலமும் முன்வரவில்லை இது போன்ற திட்டங்களை தான் நாம் எதிர்வரும் காலங்களில் உருவாக்க வேண்டும்

கல்விநடவடிக்கையினை எடுத்து கொண்டால் மலையகத்தில் தரமான பாடசாலைகள் இல்லை இங்குள்ள பாடசாலைகள் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்குகிறது மலையகத்தில் மாணவ மாணவிகள் பெரும் கஷ்டத்தில் மத்தியில் கல்வி கற்று வருகின்றனர் ஆனாலும் அந்த சிரமத்தின் மத்தியிலும் அவர்களை சாதித்து காட்டுகிறார்கள்.

சாதனை செய்யும் மாணவர்கள் ஊக்கிவிக்கபட வேண்டும் அப்போதுதான் இன்னும் பல சாதனைகளை அவர்களால“ படைக்க முடியும் அரசாங்க வேலைவாய்புகளில் ஈடுபடுவோர்கள் குறைவாகவே உள்ளனர்.

மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளை எடுத்து கொண்டால் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் தான் அதிகமானோர்
தொழிபுரிகின்றனர் தோட்டத்தில் பெற்றோர்கள் தொழில்புரியா விட்டால் பத்தனை ஸ்ரீபாதகல்வியற் கல்லுரியில் கல்வி பயில முடியாத ஒரு சூழ்நிலை இது போன்றவை உருவாக்கப்பட்டது.

இங்குள்ள மக்களுக்கு அபிவிருத்தி என்பது நகர்புறங்களில் மாத்திரம் கொண்டு இருக்க கூடாது தோட்டபுறங்களிலும் கானப்பட வேண்டும் இன்னமும் பாடசாலை மாணவர்கள் நடந்து செல்ல கூடிய ஒரு சூழ்நிலையே கானப்படுகிறது விளையாட்டு துறை என்பது மலையகத்தில் ஒரு கேள்வி
குறியாக கானப்படுகிறது.

இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு திறமைகள்
கானப்பட்டாலும் அதற்கான களம் இங்கு அவர்களுக்கு இல்லை இவ்வாறு இருக்கின்ற போது அவர்களுடைய திறமையினை எவ்வாறு வெளிகாட்ட முடியும் சுற்றுலா துறையினை எடுத்து கொண்டால் மலையகத்தில் அநேக மான இடங்களுக்கு வருவது அதிகம் கூறைவு இது போன்ற திட்டங்களை நாம் கொண்டு வரவேண்டும் எனவே எதிர்வரும் காலங்களில் ஒரு மாற்றமுள்ள மலையகமாக நாம் மாற்றியமைக்க வேண்டும் என்றார்

No comments: