இலங்கை தனியார் பேருந்து சங்கம் எடுத்துள்ளத் தீர்மானம்

நாளை மறுதினம் முதல் தனியார் பேருந்து போக்குவரத்து நடவடிக்கைகளை 50 சதவீதமாக குறைக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையில்  தமது தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக எரிபொருள் நிவாரணம் அல்லது பேருந்து கட்டணத்தை அதிகரித்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கிடைக்காமையினால் எதிர்ப்பு தெரிவித்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: