அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் நஷ்டஈடு

இலங்கையில் இருந்து, இலங்கை வெளிநாட்டு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக சென்ற நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மார்ச் மாதம் 16ம் திகதிக்கு பிறகு பதிவு செய்து கொண்டவர்களுக்கு 6 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும்,இதுவரை வெளிநாடுகளில் இலங்கையைச் சேர்ந்த 40 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: