இன்று கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

கொழும்பு 13,14 மற்றும் 15
ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8.00 மணிமுதல் நாளை அதிகாலை 5.00 மணிவரையும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதோடு, கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments: