தேர்தலை முன்னிட்டு பயணிகளுக்கான விசேட சலுகைஎதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜீலை 31ம் திகதி முதல் ஆகஸ்ட் 10ம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் புகையிரத திணைக்களத்தில் அனைத்து புகையிரதங்களும் குறித்த விசேட நாட்களில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: