உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய இதுவரை ஒரு கோடியே 55 இலட்சம் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் 6 இலட்சத்து 34 ஆயிரம்  பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சர்வதேச ரீதியாக கொரோனா தொற்றிற்கான தடுப்பூசியினைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் பல நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் இரவுப் பகலாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய மக்களின் நலனுக்காக லத்தீன் அமெரிக்க மற்றும் கரேபியன் நாடுகள் மேற்கொள்ளும் தடுப்பூசி நடவடிக்கைகளுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சீனா முன்வந்துள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெங் யீ அறிவித்துள்ளார்.

No comments: