மேல் மாகாணத்தில் பொலிஸாரால் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு

மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணிமுதல் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரால் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பில் பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய 376 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த 2164 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: