வங்கி ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

அரச வங்கி தற்போதைய நிலைமைத் தொடர்பில் பிரகதி வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

அரச வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகள், ஓய்வூதியப் பலன்களை இழந்த அரச வங்கிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் தொடர்பிலும், வங்கிக் கடன் வீதத்தை குறைத்தல் தொடர்பான பல விடயங்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் வங்கி ஊழியர்களின் சிக்கல்கள் மற்றும் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: