மலையக ரயில் சேவைகள் மட்டுப்படுத்தும் செயற்பாடு

நேற்று இடம்பெற்ற சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவத்தைத்  தொடர்ந்து மலையக ரயில் சேவைகள் நானுஓய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த புகையிரதப் பாதை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் நிறைவடையும் வரை பதுளை சேவையில் ஈடுபடும் ரயில்கள் நானுஓய வரை மட்டுமே சேவையில் ஈடுபடும் என ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: