வெடிபொருட்கள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது
திருகோணமலை போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய கிண்ணியா அல் அக்ஸா பாடசாலைக்கு அருகில் வெடிபொருட்கள் வைத்திருந்நத நபர் ஒருவரை காவற்துறையினர் நேற்றைய தினம் கைது செய்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த நபரிடமிருந்து 4 டெட்டனேட்டர்கள்,50 அடி நீளமான டைனமோட் எரிபொருளுக்கப் பயன்படுத்தப்படும் நுால் மற்றும் வெடிப்பொருட்கள் என்பன காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: