ஆயிரம் ரூபாய் அரசியலை விடுத்து வேலைக்கேற்ற ஊதியத்தை பெற்றுத்தர முயற்சியுங்கள் -புத்திரசிகாமணி
(நீலமேகம் பிரசாந்த்)

பொதுத்தேர்தல் வந்தவுடனே மலையகத்தில் வாக்குகளுக்காக ஆயிரம் ரூபாயை பேசி வாக்கு வேட்டையில் ஈடுபடாமல் தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியத்தை பெற்றுத்தர முன்வர வேண்டுமேன ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ஆரம்பத்தி கத்தியால் நூறு தேயிலை செடிகளை கவ்வாத்து வெட்டியவர்கள் தற்போது இயந்திரத்தால் ஆயிரம் செடிகளை வெட்டுகின்றனர்.ஆரம்பத்தில் மருந்து கொள்கலனால் நூறு தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளித்தவர்கள் தற்போது ஆயிரம் தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளிக்கின்றனர்.

நாளுக்கு நாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் அளவு கூடிவிட்டது.ஆனால் சம்பளம் கூடவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பிரச்சனை இல்லை ஆயிரம் பிரச்சனைகள் வேலைக்கேற்ற ஊதியத்தை கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க நேரிடும் எனவே ஆயிரம் ரூபாயில் அரசியல் செய்வதை விடுத்து வேலைக்கேற்ற ஊதியத்தை பெற முயற்சி செய்யுங்கள் என புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

No comments: