இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளதோடு,கடந்த 24 மணி நேரத்தில் 49,310 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 6 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 740 பேர் உயிரிழந்துள்ளதோடு, இதுவரையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 601 அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: