நான் உங்களில் ஒருவன் தொழிலாளியின் பிள்ளை

தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் நேற்று மாலை கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் “நான் உங்களில் ஒருலாளியின் மகனாக இருந்து அமைச்சராகியிருந்தால் என்னால் உணவன் ,தொழிலாளியின் பிள்ளை,அரசியல்வாதி அல்லது முதர்வுப்பூர்வமாக வேலை செய்ய முடியாமல் போயிருக்கும்.மக்களோடு மக்களாக வாழ்ந்து கஷ்டங்களை அனுபவித்ததால்தான் என்னால் மக்களுக்கான சேவையை உரிய முறையில் வழங்க முடிகின்றது” என்று கருத்துரைத்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் தெரிவித்ததாவது கடந்த நான்கரை வருடங்களாக உணர்வுப்பூர்வமாக சேவை செய்து தான் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.நான்கரை வருடங்களாக ஏமாற்றினேனா. சேவையாற்றினேனா என்பது மக்களுக்குத் தெரியும்.வேலை செய்யாமல் மக்களை இதுவரை காலமும் ஏமாற்றி வந்தவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு 5 தேசிய பாடசாலைகள் அமைப்பதற்கு 2014ல் அனுமதி கிடைத்திருந்தது.எனினும் இங்குள்ள அமைச்சர் ஒருவரும்,பல துரோகிகளுமே இதனை தடுத்தி நிறுத்தி சமூகத்திற்கு அநீதியழைத்தனர் என்றும் பல கருத்துரைகளை முன்வைத்ததாக தெரியவந்துள்ளது.

 

No comments: