அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


ஊரடங்கு உத்தரவு மற்றும் விடுமுறை வழங்குதல் தொடர்பான விடயங்களில் இதுவரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சமூகத்தில் பல்வேறு தரப்பினர் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments: