புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம்

தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான நியமங்களுக்கு அமைவாக பிறப்பு சான்றிதழ் என்பதற்குப் பதிலாக  புதிய தேசிய பிறப்பு சான்றிதழை அறிமுகம் செய்யவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பழைய பிறப்புச் சான்றிதழில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஆறு விடயங்களை அடிப்படையாக வைத்து புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேசிய பிறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்படுவதுடன் விசேட தனித்துவ இலக்கம் ஒன்று வழங்கப்படவுள்ளதோடு மிகவும் பாதுகாப்பான தாள் ஒன்றில் அச்சிடப்படவுள்ளதுடன் உடனடி SCAN குறியீடு,அதற்கான இலக்கம்,Watermark என்பவற்றுடன்,விசேடமாக பதிவாளர் நாயகம் திணைக்கள ஆணையாளரின் கையொப்பத்துடன், புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய பிறப்புச் சான்றிதழை விநியோகிக்கும் நடவடிக்கைகள் அது தொடர்பான செயன்முறைகள் பூர்த்தியாக்கப்பட்டப் பின்னர் மேற்கொள்ளப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம்  தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: