இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 931  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதியில்  708 உயரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,771 பதிவாகியுள்ளது.

மேலும் இந்தியாவில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  14 இலட்சத்து 36 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: