மேல் மாகாண காவற்துறையின் விசேட சுற்றிவளைப்புமேல் மாகாணத்தில் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 409 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

மேலும் மேல் மாணத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிக்கொண்டிருந்த 1522 பேர், சமூக இடைவெளியைப் பேணாத 1340 பேருக்கும்  காவற்துறையினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: