சஜித் பிறேமதாசவினால் அம்பாறை தமிழர்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமையே வினோகாந்த் -பி.தயாரத்ன

 வினோகாந்த் ஊடகப்பிரிவு

அம்பாறையில் சஜித் பிரறேமதாசவினால் தமிழ் மக்களுக்காக ஒரு தலைவர் உருவாக்கப்படுகின்றார் அவரே இம்முறை மக்கள் சக்தியில் திகாமடுல்லையில் போட்டியிடும் இளம் ஆளுமை வினோகாந்த் எனது முழு ஆதரவையும் இத் தேர்தலில் நான் அவருக்கு வழங்குவேன் என முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வினோகாந்தினை ஆதரித்து நேற்று அம்பாறை புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம் பெற்ற மாபெரும் வெற்றி கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த பி.தயாரத்ன

இலங்கையில் உண்மையிலேயே ஏழைகளை நேசிக்கக் கூடிய ஒரு தலைவரென்றால் அது ரணசிங்க பிரேமதாஸ என்பதில் மக்கள் மத்தியில் மறுப்பு இல்லை .

ஜனசவிய   வீட்டுத்திட்டத்தினுடாக ஏழை மக்களுக்கு வீடுகளை   பெற்றுக்கொடுத்தவரும் அவர்தான்.அந்தவகையில் ஏழைகளை நேசிக்கின்ற இன்றைய தலைவரென்றால் அது அவருடைய மகன் சஜித் பிரேமதாஸ அவர்கள்தான் என்பதில் எந்தவொரு ஜயப்பாடும் இல்லை

சஜித் பிரேமதாஸ அவர்கள் மக்களுக்காக வீட்டுத் திட்டங்கள் மற்றும் சமூர்த்தி வேலைத்திட்டங்கள் போன்ற நிறைய செயற்திட்டங்கள தான் அமைச்சராக இருந்த காலத்தில்  செய்திருக்கின்றார். பாடசாலை சீருடை திட்டம், பாதணி வழங்கும் திட்டம் என்று மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சஜித் பிரறேமதாச தயாராகவுள்ளார்.மக்களை நேசிக்கும் தலைமைத்துவம் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்தான் இளம் ஆளுமை வினோகாந்த்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தலைவரொருவரை உருவாக்க ஏற்கனவே நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

அந்தவகையில் சஜித் பிரேமதாஸ அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்காக தலைமைத்துவமாக வினோகாந்தை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிறேமதாச வெற்றிபெறும் வகையில் உங்களுடைய வாக்கு இருக்குமெனில் நிச்சயமாக திகாமடுல்ல மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து சேவை செய்யக்கூடிய தமிழ் தலைவர் ஒருவர் உருவாக்கப்படுவார்.

அவர் மூலமாக இங்கு காணப்படக்கூடிய அடிப்படை தேவைகள் அனைத்திலும் நிறைவேற்றிக் கொடுப்போம்.

தமிழ் மக்கள் அனைவரும் நன்கு யோசித்து வினோகாந்துக்கு தங்களது ஆதரவை வழங்குவதனால் சஜித்துடன் இணைந்து இங்கு காணக்கூடய அடிமட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் அம்பாறை மாவட்டத்தில்  பெரிய அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.இன்னும் ஒருவாரம் வாய்ப்பு இருக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். என்றார்.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments: