நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்

நாட்டில் நேற்றைய  தினம் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கியில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும் லங்காபுர பிரதேச செயலகத்தின் பணிக்குழாமின் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2814 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2333 ஆக அதிகரித்துள்ளதோடு, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள  470 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: