மக்களின் தேவைகளே எனது சேவையாக உதிக்கும் -ஐ.ம.சக்தி வேட்பாளர் வினோகாந்த்
வினோகாந்த் ஊடகப்பிரிவு

மக்களது தேவைகளே எனது சேவைகளாக உதிக்கும் மக்களின் எண்ணப்பாடுகளுடன் பயணிப்பதே எனது நோக்கமான அமைந்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்கிதியின் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளரி வெ.வினோகாந்த் தெரிவித்தார்.

நேற்றையதினம் பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

அம்பாரை மாவட்டத்தினை பொறுத்தமட்டில் மக்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையிலே காணப்படுகின்றனர் கடந்த காலத்தில் என்னால் இனங்காணப்பட்ட அளவிற்கு மக்களுக்காக உதவிகளை நான் செய்துள்ளேன்.

ஆனால் அதைவிட அதிகளவு மக்கள் மிகமுக்கியமான தேவைப்பாடுகளுடன் காணப்படுகின்றனர் அதனை இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்வது எனது நோக்கங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

மக்களின் தேவைப்படுகளை நன்கு இனங்கண்டு அவற்றை எனது சேவைகளாக சிறந்த அபிவிருத்தி செயற்பாடாக மாற்றுவது எனது கனவாக இருக்கின்றது.

மக்களில் ஒருவனாக வலம் வந்து மக்களது ஏகோபித்த பிரதிநிதியாக சேவை செய்ய மக்கள் எனக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும் மக்களை நான் நம்புகின்றேன் ஏன் எனில் பொய் வார்த்தைகளுக்கு மக்கள் ஏமாறுபவர்கள் அல்ல.

எமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் கடந்த காலங்களைப் போன்று ஏமாறாமல் அபிவிருத்தியை நோக்கி நகர வேண்டும் ஒரு ஆளுமையும் அதிகாரமும் உள்ள பிரதிநிதியால் மாத்திரமே தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும்.

மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவன் என்ற வகையில் நான் பாராளுமன்றம் செல்லும் பட்சத்தில் அம்பாறையில்  சிறுபான்மையினராக காணப்படும் எமது சமூகத்திற்காக அபிவிருத்தி தீர்வுகளை பெற்றுக் கொடுக்க கூடியதாக இருக்கும்.

எனது இனங்காணல் மூலமாக கடந்த காலங்களில் தமிழர் பிரதேசங்களில் அதிகளவான சேவைகளை செய்துள்ளேன் உங்கள் ஆணைகிடைக்கும் பட்டசத்தில் உங்களில் ஒருவனாக சேவை செய்ய முடியும் என்பதை மக்களிடம் தெரிவித்துக் கொள்ளின்றேன் என்றார்

No comments: