தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றிக் கூட்டம் - ராகலை

பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரசாரக் கூட்டம் ஒன்று நேற்று ராகலை தோட்டத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவருமான உதயகுமார் கலந்துக் கொண்டதுடன் பெருந்திரளான மக்களும் கலந்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு மக்கள் பாராட்டை தெரிவித்ததுடன் தமது முழுமையான ஆதரவை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்குவதாகவும் உறுதியளித்ததாக தெரியவந்துள்ளது.


No comments: