கடற்படையினரால் மீட்கப்பட்ட கேரள கஞ்சா

வடக்கு கடற்படைப் பகுதியில் பொறுப்பான தளபதியின் மேற்பார்வைில் வடக்கு கடற்படையைச் சேர்ந்த கடற்படைக் குழுவினரால் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மண்டைத் தீவு தென்கடலை மையமாகக் கொண்டு ஒரு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது சந்தேகத்துக்கிடமான டிங்கி ஓன்றில் 164 கிலோகிராம்  கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான  சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களாகவும்  அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆண்டின் கடைசி ஏழு மாதங்களில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3376 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: