99 டெட்ட நேட்டர் மற்றும் 8 குண்டுகள் நாவலபிட்டி பகுதியில் மீட்பு


(எஸ்.சதீஸ்)
நாவலபிட்டி கொத்மலை ஒயாவின் கற்குகையில் இருந்து 99டெட்டநேட்டர் மற்றும் 8குண்டுகள் நாவலபிட்டி விசேட அதிரடி படையினரால் மீட்கப் கட்டுள்ளது இந்த சம்பவம் 07.07.2020.செவ்வாய்கிழமை மாலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது 

நாவலபிட்டி கொத்மலை ஒயாவிற்கு நீராட சென்ற ஒரு குழுவினரால் குறித்த டெட்டநேட்டர் மற்றும் குண்டுகள் இனங்கான பட்டதை தொடர்ந்து நாவலபிட்டி விசேட அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடி படையினர் குறித்த வெடிபொருட்களை மிட்டுள்ளனர்

 என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி விசேட அதிரடி படையினர் ஊடாக நாவலபிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து நாவலபிட்டி கொத்மலை ஒயா விற்கு சென்ற நாவலபிட்டி பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.No comments: