உயர்தரம் பரீட்சை மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான தீர்மானம் இன்று

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்தப்படும் தினங்கள் தொடர்பான விடயங்களை வெளியிடுவதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 27ம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு  எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, தரம் 11,12,13 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் வரும் முதலாவது திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கு கல்வி  அமைச்சுத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: