அஞ்சல் மூல வாக்குப் பதிவு- 4வது நாள்

இன்றைய தினம் பொலிஸார்,இராணுவம், பாதுகாப்பு திணைக்களம்,மாவட்ட செயலாளர் காரியாலயங்கள்,தேர்தல் செயலக அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிக்க முடியும் எனவும் நாளை இடம்பெறும் வாக்குப் பதிவு காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை மாத்திரமே வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த தினத்தில் வாக்களிக்கத் தவறுவோர் எதிர்வரும் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 4ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


No comments: