சட்டவிரோதமாக 40 பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது


(ச.குமணன்)

சட்டவிரோதமாக உரிய அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட 40 பசு மாடுகளை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 40 பசு மாடுகளே புதன்கிழமை(15) நள்ளிரவு மீட்கப்பட்டது.

இவ்வாறு சவளக்கடை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கால்நடையாக நடத்தி கொண்டு சென்ற நிலையில் மீட்கப்பட்ட 40 பசு மாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நடவடிக்கையானது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

அத்துடன் 40 பசு மாடுகளை சட்டவிரோதமாக கால்நடையாக நடத்திக் கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments: