உந்துருளிப் பந்தயமொன்றை நடத்திய நபர் உள்ளிட்ட 39 பேர் கைதுபிலியந்தல- கெஸ்பேவ பகுதியில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட குறுக்கு வீதியில் உந்துருளி பந்தயமொன்றை நடத்திய நபர் உள்ளிட்ட 39 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 27 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த உந்துருளிப் பந்தயத்தை சமூக வலைத்தளங்களில்  நேரடியாக ஒளிப்பரப்பவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: