எதிர்வரும் 2ம் திகதியுடன் நிறைவடையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சகல பிரசார நடவடிக்கைகளையும் எதிர்வரும் 2ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இம்முறை பொதுத் தேர்தலுக்காக 12,985 வாக்குப்பதிவு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்காக மூன்றரை இலட்சம் அதிகாரிகள் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: