2020 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk (onlineexams.gov.lk/onlineapps) என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

படசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பான வழிகாட்டல்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பான விடயங்கள் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: