2015 முதல் 2019 வரைதான் மலையகத்தின் பொற்காலம்-உதயா தெரிவிப்பு

கொட்டகலை கிரேக்லி பகுதியில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் “2015 முதல் 2019 வரைதான் மலையகத்தின் பொற்காலம்” என்று கூறலாம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான  உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லாட்சி காலத்தில் திகாம்பரம் அமைச்சராக இருந்த போது வீட்டு உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்  நுவரெலியா மற்றும் அம்பகமுவ  பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டு பல பிரதேச  சபைகளாக அதிகரிக்கப்பட்டு  அதில் இன்று தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் உறுப்பினர்களாக வந்திருக்கின்றார்கள்.ஆகவே உரிமையையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொடுத்தது கடந்த நல்லாட்சி காலத்தில் தான் என்று மேலும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.  

No comments: