கடற்படையினரால் மீட்கப்பட்ட 111 கிலோகிராம் கஞ்சா- இருவர் கைதுநேற்றைய தினம் யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 111 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட போதைப் பொருளையும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 

No comments: