தீ பரவலில் 10 வீடுகள் முற்றாக சேதம்

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட  தீ விபத்தில் லயன் தொகுதியில் அமைந்திருந்த 10 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இத்தீப்பரவலை பொதுமக்கள் இணைந்து  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன் சுமார் 1 மணித்தியாலத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்குள்ளான 10 வீடுகளில் குடியிருந்த  75 பேரும் தற்காலிகமாக தோட்ட கலாசார மண்டபத்திலும் தோட்ட முன்பள்ளி பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபை ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்காண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: