பெருந்தோட்ட மக்களுக்கான 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இன்று ஹப்புத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜிபக்ஷ கருத்துரைத்த போது,  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெருந்தோட்ட மக்களுக்கான 1000 ரூபா சம்பளத்தைப்  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு மாத்திரமே வீடுகள் வழங்கப்பட்டன. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வாக்குச் சீட்டில் பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கால சமூகத்தினருக்கு சிறந்த கல்வியை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கருத்துரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: