VIDEO எந்த பாதுகாப்பும் இல்லை (தலவாக்கலை தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்)


தலவாக்கலை லோகி தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் நேற்றும் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு ஈடுபட்டு வருகின்றனர்


தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தினை இரண்டு தினங்களாக முன்னெடுத்து வருகின்றனர் குறிப்பாக தமது தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் இருப்பதாகவும் அதனை செப்பனிடுவது புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் எடுப்பதும் இல்லை அதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பது முதல் கோரிக்கை. 

அத்தோடு தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான எவ்விதமான செயற்பாடுகளும் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப் படவில்லை என்றும் தோட்டங்கள் காடாகி வருவதை நான் விரும்பவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் முன்னெடுப்பதில் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

அத்தோடு தோட்ட வைத்தியசாலை இருந்த போதிலும் தோட்ட வைத்திய அதிகாரியை சுகாதாரப் பிரிவினர் இன்மையால் தமக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் குளவி கொட்டு காரணமாக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

அடுத்ததாக தொழிலாளர்களுக்கு இல்லை பெருந்தோட்ட கம்பெனியின் ஆள் இலத்திரனியல் அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை உளுந்து குறைவாக இருக்கும் காலத்தில் மாத்திரமே நிர்வாகம் பயன்படுத்துவதாகவும் ஒழுங்கு அதிகமாக இருக்கும் காலங்களில் அட்டையுடன் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர். 

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணத்தினாலும் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் அளவு அதிகரித்துள்ள நிலையிலும் அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனாலும் பெருந்தோட்டங்களில் தமக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்தும் பிரயோகித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தோட்டம் முகாமையாளர் உடன் கலந்துரையாடுவதற்கு பல சந்தர்ப்பங்கள் அனுமதி கேட்ட போதிலும் இதுவரை அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் நமக்கான தீர்வு கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என நோக்கி தோட்ட மக்கள் தெரிவித்தனர்

No comments: