UPDATED .துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு மரணமடைந்த இளம் புலனாய்வாளர்


(கனகராசா சரவணன்)

தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு தானே கைதுப் பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்முனை தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) மாலையில் இடம் பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் வடமராச்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரனா கே.கமலராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்

No comments: