PHOTOS நோர்வுட் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம்


(சதீஸ்)

தந்தையும் மகளும் கைது


நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வுட்  ஜனபதய கொலனிபகுயில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மானாதோப்பில் இருந்து புதைக்கப்பட்டிருந்து ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று சனிகிழமை மீட்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு வழங்கப்பட்ட தகவலுக்கமைய கொழும்பில் தலமையகத்தில் இருந்து நோர்வுட் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமையகமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரனைகளை மேற்கொண்டபோது குறித்த சிசு வீட்டிட்கு அருகாமையில்உள்ள மானா தோப்பு பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்ட பகுதியினை குறித்த பெண்அடையாளம் காட்டியுள்ளார்

சம்பவம் தொடர்பில்ஹட்டன் தடைவியல் பொலிஸார் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் கே.ராமமுர்த்தி  ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவளைக்கப்பட்டு பதில் நீதவான்  தலைமையில் விசாரனணகள் இடம்பெற்றது.

குழி தோண்டி புதைக்கப்பட்ட பகுதியில் இருந்து சிசு தோண்டி எடுக்கப்பட்டது இதேவேளை தோண்டி எடுக்கப்பட்ட சிசுவினை டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி கேசான் மதுசங்க ஆகியோர் தலைமையில் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த சிசுவினை பெற்ற பெண்ணுக்கு 26 வயது எனவும் பெண்ணின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் குறித்த வீட்டில் இந்த பெண்ணும் தந்தையும் மாத்திரம் வசித்து வந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது

குறித்த பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று இதற்கு முன்பு பிறந்துள்ளது அதனை குறித்த பெண்ணே வளர்த்து வருவதாக தெரியவந்துள்ளது

 குறித்த பெண் இந்த சிசுவைநேற்று.வெள்ளிகிழமை
பிரவேசித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பெண் 1990 என்ற அவசர இலக்கத்தை கொண்ட அம்புலன்ஸ் வண்டி ஊடாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

சிசு கொலைசெய்து புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் தந்தையாரின் வாக்குமுலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது பெண்ணின் தந்தையாரும் இந்த சிசுவின் கொலைசம்பவத்தில் தொடர்பு பட்டிருக்கலாமென நோர்வுட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தோண்டியெடுக்கப்பட்ட சிசு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது

சிசுவை கொலைசெய்த பெண்ணின் மூத்த மகனை ஹட்டன் நீதிமன்றில்
முன்னிலைபடுத்தபடும் போது குறித்த இரண்டரை வயது சிறுவனை அவர்களுடைய உறவினர்கள் பொருப்பேற்கலாம் இல்லாவிட்டால் நீதிமன்ற பணிப்புறரைக்கு அமைய சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கபடுமென பொலிஸார் குறிப்பிட்டார்

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தையும் மகளையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.











No comments: